Leave a comment

இலவசம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010

Microsoft Office 2010

microsoft office professional 2010

microsoft office professional 2010

பல மாதங்களாக இதோ அதோ என்று சொல்லிக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட், தனது 14வது ஆபிஸ் பதிப்பினை, ஆபிஸ் 2010, இன்று (15/06) வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே நடப்பில் இருப்பது இதன் 12வது பதிப்பான ஆபிஸ் 2007. “13” என்பது மேற்கத்திய வழக்கப்படி ராசியில்லாத எண்  என்பதால் (office 2009) அப்பதிப்பினை ஆரம்பிப்பது போல் செய்து பின் கைவிடப்பட்டது.

ஆபிஸ் 2010-ல் 3 முக்கிய தொகுப்புகள் (suites) வெளியிடப்பட்டிருக்கிறது.

1. ஆபிஸ் ஹோம் & ஸ்டுடண்ஸ்
2. ஆபிஸ் ஹோம் & பிஸினஸ்
3. ஆபிஸ் ப்ரோபஸனல்

தொகுப்பு வகை, வசதி & வித்தியாசங்களுக்கு இங்கே சொடுக்கவும். மேலும் விபரம் அறிய… சொடுக்கவும்

(ஏற்கனவே நான் பீடா பதிப்பினை உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். எந்த தடங்கலும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது).

இச்சமயம் மைக்ரோசாப்ட் மூன்று புதிய யுக்திகளை கையாண்டுள்ளது. அவை…
1. இலவச ஆன்லைன் ஆபிஸ் (Office Web Apps)
2. இலவச தொடக்க ஆபிஸ் 2010 (Office Starter 2010)
3வது இலவசம் பின்னால் விளக்கப்பட்டுள்ளது
(இலவசம்… இலவசம்… நம்ம அரசியல்வாதிகள் 2011-க்கு கவனிக்கவும்.)

ஆபிஸ் ஸ்டாடர் 2010-ல் வேர்ட் & எக்ஸல் மட்டுமே உள்ளது அதுவும் அடிப்படை செயல்படுகளுடன். புதிதாக கணிணி வாங்குபவராக இருந்தால் மட்டுமே இவை ப்ரிலோடடாக (OEM – Original Equipment Manufacturer முறையில்)  வழங்கப்பட இருக்கிற்து. (மறந்து விடாதீர்கள்… கேட்டு  வாங்கவும்).

office web apps

web apps

ஆபிஸ் வெப் ஆப்ஸ்ல் வழக்கமான ஆபிஸ் 2010 இதிலிருந்து சற்று  வேறுபட்டு அத்தியாவசிய வசதிகளை மட்டும் தருகின்றன (வெப் ஆப் என்பதால் எல்லாம் தரமுடியாது). உங்களிடம் ஹாட்மெயில் ஐடி (hotmail ID) இருந்தால் போதும், அதன் மூலம் புகுபதிகை செய்து கொண்டு உபயோகிக்கலாம். இதில் உள்ளவை வேர்ட், எக்ஸ்ல், பவர் பாய்ண்ட் & ஒன் நோட். ஒன் நோட் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. மேலும் இவைகள் மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவுடன் (Microsoft SkyDrive) இனைந்து 25GB டிஸ்க் ஸ்பேஸையும் தருகிறது. உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்யவும், ஆன்லைனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவுக்கவும் முடியும். இது கண்டிப்பாக (Google Docs) கூகுள் டாக்ஸ்க்கு போட்டியே தான்.

உங்களிடம் ஆபிஸ் 2007 இருக்கிறத? அது மார்ச் 5, 2010, முதல் செப்டம்பர் 30, 2010-க்குள் வாங்கப்பட்டதா? அப்படி எனில் உங்களுக்கு ஆபிஸ் 2010 முற்றிலும் இலவசம். முந்துங்கள் இச்சலுகை அக்டோபர் 31, 2010 மட்டுமே. (நீங்கள் தகுதியானவரா என இங்கு பார்க்கவும்).

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010-ன் புதிய வசதிகள்:

பேக்ஸ்டேஜ் (BackStage): அனைத்து முதல் வகை வேலைகள் செய்ய – New, Open, Save, Print & View Recent Documents.

பட்டைகள் (Ribbons): அகலமான சுயமாக மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய கருவிப்பட்டைகள்.

இணையத்தில் பகிர்ந்து கொள்ளுதல் (Sharing Documents to Online Media or Email)

படங்களை நேர்த்தியாக்குதல் (emboss, drop shadow etc.)

பவர் பாய்ண்டில் வீடியோ தொகுத்தல்

திரைகளை வடிவெடுத்தல் (Screen Shot Capturing & Clipping)… இன்னும் நிறைய…

ஆகவே தமிழ் மக்களே இனி நம்மிடம் ஆபிஸ் தொகுப்பு இல்லையே என கவலை பட தேவையில்லை … ஆபிஸ் வெப் ஆப்ஸ் இருக்கிறது. இலவசத்தை அனுபவிப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: