4 Comments

புதிய வகை கண் நோய் பரவும் அபாயம்

“மெட்ராஸ் ஐ” என அழைக்கப்படும் சென்னை கண்நோய் குறிப்பிட்ட சீசனில் வந்து மறைந்துபோகும். சமீப காலமாக மெட்ராஸ் ஐ குறைந்து போனாலும் தற்போது புதிய வகை கண் நோய் பரவுகிறது.

new kind of eye disease

புதிய வகை கண் நோய்

மெட்ராஸ் ஐயை விட அதிக நாட்களுக்கு நீடிக்கும் இந்த புதிய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கண்களின் வெளிப்படலத்திலும், இமைகளின் உள்புறத்திலும் ஏற்படும் வீக்கத்தினால் கண் வெளிப்படல சுழற்சி நோய் ஏற்படுகிறது.

பாக்டீரியா, புரோட்டோ சோவா போன்ற நுண்ணுயிரிகள் தாக்குதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை சென்னை கண் நோய் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை. சாதாரணமாக கண் நோய் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு 3, 4 நாட்களுக்கு கண்கள் இளஞ் சிவப்பாக இருக்கும். ஆனால் இந்த புதிய வகை கண் நோய் தொற்று குறைந்தது. 10 நாட்கள் வரையில் இருக்கிறது என்று சென்னை அண்ணாநகர் உமா கண் மருத்துவமனை கண் மருத்துவர் அருள்மொழி கூறினார். மேலும் அவர் கூறுகையில், சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் இந்த கண் நோய் நீடிக்கிறது. வைரஸ் தொற்று ஆரம்பித்து பின்னர் அதிக நாட்கள் நீடிக்கிறது. இந்த முறை வைரஸ் அதிக தீவிரத்துடன் செயல்படுகின்றன என்றார்.

சென்னை கண் நோய்க்கு பயன்படுத்தும் அதே மருந்தையே இதற்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கண் நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் நிறைய பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது காணப்படும் புதிய வகை கண்நோய் குறித்து ஆய்வு செய்து வருவதாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சீனியர் டாக்டர் வி.ஆர். சுதிர் தெரிவித்தார். தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் தேங்கி நிற்கும் நீரும் கண் நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் வளரக் காரணமாக உள்ளன என்று டாக்டர்கள் கூறினார்கள்.

நன்றி : மாலை மலர்
படம் : methodsofhealing.com

Advertisements

4 comments on “புதிய வகை கண் நோய் பரவும் அபாயம்

  1. ஆமாம் எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு தொடர்ந்து பத்து நாட்கள் இருக்கிறது…ஒரு தூரத்து கல்யாண வீட்டிற்கு சென்றபின் இப்படி வந்த்துள்ளது. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    • எங்கள் வீட்டில் வேலைக்கு வரும் அக்கவிற்கு கண் வலி இருந்தது (காரணம் அவரது குழந்தை பள்ளியில் இருந்து கொண்டு வந்திருக்கிறாள்). அவர் அப்படியே என் அம்மவிற்கு பரப்பி விட்டுச்சென்றார். ஏதோ சீசன் போல, பக்கத்து வீட்டு அம்மாவும், அவரது பையனும் உப்பிய சிவந்த கண்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஓடியே வந்துவிட்டேன். google-ல் search-னேன்.. மாலைமலர் கட்டுரை கிடைத்தது. அப்படியே இங்கே பகிர்ந்தேன்.
      வருகைக்கு நன்றி சரவணன்.

  2. Thanks for this information .If any effects in this disease because i had it

    • பெரிய அளவில் ஒன்றும் இல்லை. இது காலம் தவறி வரும் கண் வலி. 5 – 10 நாட்கள் வரை இருக்கலாம். மருத்துவரை அணுகவும். உடனடி தீர்வு உண்டு. வருகைக்கு நன்றி லீலாவதி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: