Leave a comment

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 3D 2012

poster of the amazing spider-man 3d

The Amazing Spider-Man 3D 2012 Part – 4

  • ஒரு மாணவன், அவனை சிலந்தி கடிக்கும் உடனே அவன் சிலந்தி மனிதன் ஆகிவிடுவான். அப்புறம் ஆங்காங்கே பசை நூலை பீய்ச்சியடிப்பான்.
  • ஒரு மாணவி ஒரே சமயத்தில் ஸ்பைடர்-மேனோடு சேர்த்து 2 பேரை காதலிப்பார். இதில் நம் ஹீரோ ஜெய்பார். கடைசியில் ஊருக்கு உழைக்க நேரும், காதலை கண்ணீரோடு கைவிடுவார். ஆனால் இம்முறை ஹீரோயினி ஸ்பைடர்-மேனை மட்டுமே காதலிப்பது புதுசு.
  • ஒரு நல்ல விஞ்ஞானி, அவனது முயற்சியை கம்பெனி நிர்வாகம் ஒத்துக்கொள்ளாது, வேலையை விட்டு தூக்கும். கடுப்பாகிப் போனவர் பச்சையாய் இருக்கும் ஒரு தண்ணீரை குடித்து பல்லியோ கில்லியோ ஆகிவிடுவார். ஊரை ரெண்டாக்குவார். கிளைமாக்ஸில் திருந்தி விடுவார்.
  • இதற்கு இடையில் ஒரு வெட்டி போலீஸ் ஆபீசர், 100 கார்கள், 50 ஹெலிகாப்டர்கள், சில விபத்துகள், அதே நியுயார்க் நகரம்.

நம்மூரில் சொல்வது போல இது பழைய பஞ்சாங்கம் கூட அல்ல. ஒரே பஞ்சாங்கத்தை ரீபிரிண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

கதை சுருக்கம்

ஸ்பைடர்-மேனின் தந்தை ஒரு விஞ்ஞானி. ஊனமில்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ள, அது தோல்வியில் முடிகிறது. விளைவு விபரீதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தன் ஆரய்ச்சி படிவங்கள் சிலவற்றை அழித்து விடுகிறார். மேற்படி ஆரய்ச்சிகளை தனிமையில் செய்ய எண்ணி தன் மகனை மாமாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு தலைமறைவாகிறார். Chapter Over.

தனது மாமா வீட்டில் தான் ஸ்பைடர்-மேன் வளர்கிறான். திடீரென ஒரு நாள் குடோனில் இருக்கும் தன் தந்தையின் Briefcase கிடைக்க அதில் அந்த பழைய ஆரய்ச்சியின் சில ரகசியங்கள் கிடைக்கிறது. அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள College Internship Program என்ற சாக்கில் OSCORP ஆரய்ச்சி கூடத்திற்கு சென்று எதோ தவறு செய்ய அங்கே ஒரு சிலந்தி கடித்து சிலந்தி மனிதனாகிறான்.

இச்சம்பவங்களுக்கிடையில் தான் ஏற்கனவே ஒரு போட்டோவில் பார்த்த தன் தந்தையின் நண்பரை (ஒரு கையில்லாதவர்) OSCORP-ல் சந்தித்து – பேசி – பழகி அவரது ஆரய்ச்சிக்கு பெரும் குழப்பமாக இருந்த ஒரு Equation-னை Solve செய்து தருகிறான். அதன்படி ஒரு பல்லியின் DNA-வை ஒரு கால் ஊனமான எலியிடம் செலுத்தி கால் முளைக்க வைத்து வெற்றி காண்கிறார்கள்.

இச்சோதனையை மனிதர்களிடம் செய்து பார்க்கலாம் என மேலிடம் சொல்ல, ஆராய்ச்சி முழுமையடையவில்லை அவ்விஞ்ஞானி மறுக்க, உடன் அவரை வேலையை விட்டு தூக்குகிறார்கள். வெறுப்படைந்த விஞ்ஞானி தனக்குத்தானே சோதித்துக்கொள்ள, ராட்ஷதப்பல்லியாகிறார்.

பிறகென்ன அந்த பல்லி ஊரை ரணகளம் பண்ண நம்ம ஸ்பைடர் ஹீரோ தடுத்து அதகளம் பண்ணுவது தான் மீதி. காதல் பிரிவோடு முடிவு சுபம்.

பல்லியும் சிலந்தியும் அமேரிக்கவை அச்சுருத்துவதால் இவ்விரண்டையும் வடை வைத்து பிடிக்க ஒரு போலீஸ் வேணுமே. அது தான் ஹீரோயினி அப்பா. முடிவில் தன் மகளின் பாதுகாப்பிற்காக அவளை பிரிந்து விடுமாறு சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து விடுகிறார். படம் Over.

hero - heroine - villain - police

நான்கு நல்லவர்கள் – ஹீரோ – ஹீரோயினி – வில்லன் – போலீஸ்

இந்தக் குழுவினர் 2 வருத்திற்கு ஒரு முறை 100 கோடியை தண்டம் செய்வது என முடிவெடுத்துவிட்டார்கள். ஒரே கதையை 4 முறை படம் எடுத்த இவர்களை விட, அந்த நான்கையும் பார்த்த என்னை …. !@#$ … என்ன செய்வது சரத்பாபுவால் துரோகம் செய்யப்பட்டு ஒரே பாட்டில் ரஜினி பணக்காரராவதையும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை வந்து எதிரிகளை வதம் செய்யும் விஜயையும் பார்த்து பார்த்து பழகியவன் என்பதால் இந்த படத்தையும் புதிதாகவே பார்த்தேன்.

காட்சிகளில் கூட மாற்றம்மில்லாமல் இருப்பது தான் செம கடுப்பாகிறது. முதலில் வம்பிழுக்கும் சக மாணவன், அவனை திருப்பியடிப்பதால் வரும் காதல், சிலந்தி மனிதனானவுடன் தனியாக ப்ராக்ட்டீஸ் பண்ணுவது, அறிவுரை கூறிய மறுநாள் அதே மாமா கொலையாவது, அதற்கு பழிவாங்க கிளம்பி M.G.R போல் ஊரை காப்பற்றுவது, அவ்வப்போது தன்னம்பிக்கை டயலாக் அடிப்பது, காதலை கழட்டிவிட்டு அழுவது. நியுயார்கில் ஒரே தெருவில் டைவ் அடித்து பறப்பது, ஆய்வகத்தில் ப்ளு (நல்லது) & பச்சை (கெட்டது) அமிலங்கள் ரெடி பண்ணுவது. கலர கூடவாய்யா மாத்த மாட்ட நீ.

நம்மூரில் காலேஜ் என்றால் கேன்டீனும், இன்டர் காலேஜ் காம்படீஷனும். ஹாலிவுட்டில் ஸ்கூல் என்றால் ஒரு வெரண்டாவில் பீரோவை திறந்து திறந்து மூடுவது.

தியேட்டரில் ஒரு கொடுமை என்னவென்றால், 3D படம் என்பதால் ஒரு கீறல் விழுந்த கண்ணாடிக்கு 30 ரூபாய் வாடகை வேறு, மேலும் ஏதேனும் சேதாரம் என்றால் 150 ரூபாய் அபராதமாம்.

இப்படத்தில் அமேசிங் என்றால் அது 3D தான். படம் முழுவது 3D-ல் பார்ப்பது சூப்பராக இருக்கிறது. நியுயார்க் நகரின் கூர்மையான கட்டிடங்கள் கண்ணை கிழிப்பது, அடுகடுக்காகத் தெரிவது, நம் கண்ணில் நூலை பாய்ச்சுவது, தூசு துகள்கள் பறப்பது … என.

சாதரணமாகப் பார்த்தால் இந்தப் படம் ஒரே கதையுள்ள 4வது படம். 3D-ல் பார்த்தால் ஒரே கதையுள்ள 4வது முதல் படம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பெற்றோரும் போய் பாருங்கள் 2:15 நிமி. பொழுது போகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: