Leave a comment

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 3D 2012

poster of the amazing spider-man 3d

The Amazing Spider-Man 3D 2012 Part – 4

  • ஒரு மாணவன், அவனை சிலந்தி கடிக்கும் உடனே அவன் சிலந்தி மனிதன் ஆகிவிடுவான். அப்புறம் ஆங்காங்கே பசை நூலை பீய்ச்சியடிப்பான்.
  • ஒரு மாணவி ஒரே சமயத்தில் ஸ்பைடர்-மேனோடு சேர்த்து 2 பேரை காதலிப்பார். இதில் நம் ஹீரோ ஜெய்பார். கடைசியில் ஊருக்கு உழைக்க நேரும், காதலை கண்ணீரோடு கைவிடுவார். ஆனால் இம்முறை ஹீரோயினி ஸ்பைடர்-மேனை மட்டுமே காதலிப்பது புதுசு.
  • ஒரு நல்ல விஞ்ஞானி, அவனது முயற்சியை கம்பெனி நிர்வாகம் ஒத்துக்கொள்ளாது, வேலையை விட்டு தூக்கும். கடுப்பாகிப் போனவர் பச்சையாய் இருக்கும் ஒரு தண்ணீரை குடித்து பல்லியோ கில்லியோ ஆகிவிடுவார். ஊரை ரெண்டாக்குவார். கிளைமாக்ஸில் திருந்தி விடுவார்.
  • இதற்கு இடையில் ஒரு வெட்டி போலீஸ் ஆபீசர், 100 கார்கள், 50 ஹெலிகாப்டர்கள், சில விபத்துகள், அதே நியுயார்க் நகரம்.

நம்மூரில் சொல்வது போல இது பழைய பஞ்சாங்கம் கூட அல்ல. ஒரே பஞ்சாங்கத்தை ரீபிரிண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

கதை சுருக்கம்

ஸ்பைடர்-மேனின் தந்தை ஒரு விஞ்ஞானி. ஊனமில்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ள, அது தோல்வியில் முடிகிறது. விளைவு விபரீதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தன் ஆரய்ச்சி படிவங்கள் சிலவற்றை அழித்து விடுகிறார். மேற்படி ஆரய்ச்சிகளை தனிமையில் செய்ய எண்ணி தன் மகனை மாமாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு தலைமறைவாகிறார். Chapter Over.

தனது மாமா வீட்டில் தான் ஸ்பைடர்-மேன் வளர்கிறான். திடீரென ஒரு நாள் குடோனில் இருக்கும் தன் தந்தையின் Briefcase கிடைக்க அதில் அந்த பழைய ஆரய்ச்சியின் சில ரகசியங்கள் கிடைக்கிறது. அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள College Internship Program என்ற சாக்கில் OSCORP ஆரய்ச்சி கூடத்திற்கு சென்று எதோ தவறு செய்ய அங்கே ஒரு சிலந்தி கடித்து சிலந்தி மனிதனாகிறான்.

இச்சம்பவங்களுக்கிடையில் தான் ஏற்கனவே ஒரு போட்டோவில் பார்த்த தன் தந்தையின் நண்பரை (ஒரு கையில்லாதவர்) OSCORP-ல் சந்தித்து – பேசி – பழகி அவரது ஆரய்ச்சிக்கு பெரும் குழப்பமாக இருந்த ஒரு Equation-னை Solve செய்து தருகிறான். அதன்படி ஒரு பல்லியின் DNA-வை ஒரு கால் ஊனமான எலியிடம் செலுத்தி கால் முளைக்க வைத்து வெற்றி காண்கிறார்கள்.

இச்சோதனையை மனிதர்களிடம் செய்து பார்க்கலாம் என மேலிடம் சொல்ல, ஆராய்ச்சி முழுமையடையவில்லை அவ்விஞ்ஞானி மறுக்க, உடன் அவரை வேலையை விட்டு தூக்குகிறார்கள். வெறுப்படைந்த விஞ்ஞானி தனக்குத்தானே சோதித்துக்கொள்ள, ராட்ஷதப்பல்லியாகிறார்.

பிறகென்ன அந்த பல்லி ஊரை ரணகளம் பண்ண நம்ம ஸ்பைடர் ஹீரோ தடுத்து அதகளம் பண்ணுவது தான் மீதி. காதல் பிரிவோடு முடிவு சுபம்.

பல்லியும் சிலந்தியும் அமேரிக்கவை அச்சுருத்துவதால் இவ்விரண்டையும் வடை வைத்து பிடிக்க ஒரு போலீஸ் வேணுமே. அது தான் ஹீரோயினி அப்பா. முடிவில் தன் மகளின் பாதுகாப்பிற்காக அவளை பிரிந்து விடுமாறு சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து விடுகிறார். படம் Over.

hero - heroine - villain - police

நான்கு நல்லவர்கள் – ஹீரோ – ஹீரோயினி – வில்லன் – போலீஸ்

இந்தக் குழுவினர் 2 வருத்திற்கு ஒரு முறை 100 கோடியை தண்டம் செய்வது என முடிவெடுத்துவிட்டார்கள். ஒரே கதையை 4 முறை படம் எடுத்த இவர்களை விட, அந்த நான்கையும் பார்த்த என்னை …. !@#$ … என்ன செய்வது சரத்பாபுவால் துரோகம் செய்யப்பட்டு ஒரே பாட்டில் ரஜினி பணக்காரராவதையும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை வந்து எதிரிகளை வதம் செய்யும் விஜயையும் பார்த்து பார்த்து பழகியவன் என்பதால் இந்த படத்தையும் புதிதாகவே பார்த்தேன்.

காட்சிகளில் கூட மாற்றம்மில்லாமல் இருப்பது தான் செம கடுப்பாகிறது. முதலில் வம்பிழுக்கும் சக மாணவன், அவனை திருப்பியடிப்பதால் வரும் காதல், சிலந்தி மனிதனானவுடன் தனியாக ப்ராக்ட்டீஸ் பண்ணுவது, அறிவுரை கூறிய மறுநாள் அதே மாமா கொலையாவது, அதற்கு பழிவாங்க கிளம்பி M.G.R போல் ஊரை காப்பற்றுவது, அவ்வப்போது தன்னம்பிக்கை டயலாக் அடிப்பது, காதலை கழட்டிவிட்டு அழுவது. நியுயார்கில் ஒரே தெருவில் டைவ் அடித்து பறப்பது, ஆய்வகத்தில் ப்ளு (நல்லது) & பச்சை (கெட்டது) அமிலங்கள் ரெடி பண்ணுவது. கலர கூடவாய்யா மாத்த மாட்ட நீ.

நம்மூரில் காலேஜ் என்றால் கேன்டீனும், இன்டர் காலேஜ் காம்படீஷனும். ஹாலிவுட்டில் ஸ்கூல் என்றால் ஒரு வெரண்டாவில் பீரோவை திறந்து திறந்து மூடுவது.

தியேட்டரில் ஒரு கொடுமை என்னவென்றால், 3D படம் என்பதால் ஒரு கீறல் விழுந்த கண்ணாடிக்கு 30 ரூபாய் வாடகை வேறு, மேலும் ஏதேனும் சேதாரம் என்றால் 150 ரூபாய் அபராதமாம்.

இப்படத்தில் அமேசிங் என்றால் அது 3D தான். படம் முழுவது 3D-ல் பார்ப்பது சூப்பராக இருக்கிறது. நியுயார்க் நகரின் கூர்மையான கட்டிடங்கள் கண்ணை கிழிப்பது, அடுகடுக்காகத் தெரிவது, நம் கண்ணில் நூலை பாய்ச்சுவது, தூசு துகள்கள் பறப்பது … என.

சாதரணமாகப் பார்த்தால் இந்தப் படம் ஒரே கதையுள்ள 4வது படம். 3D-ல் பார்த்தால் ஒரே கதையுள்ள 4வது முதல் படம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பெற்றோரும் போய் பாருங்கள் 2:15 நிமி. பொழுது போகும்.

Advertisements
Leave a comment

மகளிர் மேளா 2012 : குடியரசு தின சிறப்பு

Women’s Mela 2012, Chennai by self help groups

நேற்று தொழில் மற்றும் சுற்றுலா துறை பொருள்காட்சிக்கு சென்று சோர்ந்து போய் அமர்ந்திருந்தோம். (அத பத்தி அப்பறம் எழுதுறேன்) 6:10 மணிக்குள் பார்த்து முடிந்து விட்டதால், அடுத்து எங்கே போகலாம் என யோசித்த போது… ‘டபக்கென்று’ வள்ளுவர் கோட்டம் அருகில், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா நடப்பது ஞாபகத்திற்கு வர அங்கே சென்றோம். உருப்புடியாக 1 மணி நேரம் கழிந்தது.

மகளிர் மேளா 2012, சென்னை

மகளிர் மேளா 2012, சென்னை


அனேகமாய் 37-40 மாவட்ட கடைகள் இருக்கலாம். வாடிக்கையாளர் சேவையும் உண்டு. மிதியடியிலிருந்து பட்டு புடவை, நார் கூடை, இயற்கை உணவு, கல் சட்டிகள், பருத்தி உடைகள், வடகங்கள், நொருக்கு தீனிகள், சாமி சிலைகள் என நிறைய கைவினை பொருட்கள் கிடைக்கிறது. முக்கியம் கணவன்மார்களை (மனைவி) டார்சர் பண்ண பல ஃபேன்சி கடைகளும் உண்டு. இவையனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்திப் பொருட்கள். சென்ற முறை போன போது கற்றாழை ஷாம்பு, சந்தன சோப்பு, கேழ்வரகு வடகம் என வாங்கினோம். இம்முறை கொல்லிமலையில் இயற்கையில் விளைந்த தினை மாவு, சாமை (மாவு), முறுக்கு, அரிசி வடகம் என வாங்கினோம்.

நுழைவு வாயிலிருந்து …

main exhibition hall

இங்கிருந்து ஆரம்பிக்கவும்

கைவினைஞர் …

entrance

நுழைவு வாயில்

பட்டு புடவை பார்வைக்கு

silk sarees

பட்டு புடவைகள்

வேலூர் மாவட்ட விற்பனையாளர்

vellore district

வேலூர் மாவட்டம் - கூடை பின்னல்

கருர் மாவட்ட கைவினை பொருள்கள்

karur district - fashion handicrafts

கருர் மாவட்டம் - கைவினைப் பொருள்கள்

இயற்கை உணவுகள் – organic foods

kolli hills organic food.

கொல்லிமலை (உரம் சேரா) இயற்கை உணவு

நாமக்கல்

organic food seller - namakkal district

நாமக்கல் மாவட்டம்

புது வாழ்வு திட்டத்தின் கீழ்

new life scheme

புது வாழ்வு திட்டம்

உணவகம்

food court

உணவருந்தும் பகுதி


food court

உணவகம்

பாசி விற்கும் ஜிலேபி (இவங்க பேராம்)

jilebi - a old lady

பாசிமணிகள் விற்கும் ஜிலேபி அம்மா

பெரம்பலூர் சாமிகள்

perambalur district - gods idols

பெரம்பலூர் மாவட்டம் - சாமி சிலைகள்

மலர், கூடை மற்றும் சிலை வியாபரம்

artificial flowers, idols and basket

மலர், சிலை மற்றும் கூடை வியாபரம்

சொல்லணுமா?

kuzhi paniyaaram

பிச்சு போட்ட குழி பணியாரம்

அட்டவனை – இது ரொம்ப முக்கியம்

list of participating districts

மகளிர் மேளா 2012 - ல் கலந்து கொள்ளும் மாவட்டங்கள் (சொடுக்கி பெரிதாக்கவும்)

வாங்குவதற்கு நிறையவே உள்ளது. காசும் அவ்வளவாக கையை கடிக்காது. 500 ரூபாய்க்கு மேல் பொருள்கள் வாங்கினால், வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு அதே 500 ரூபாய்க்கு பொருட்கள் இலவசமாக தருகிறார்கள். கண்டிப்பாக சென்று பாருங்கள். தமிழகத்தின் பொருளாதாரம் இது போன்ற முறையில் வளர வாய்ப்பிருக்கிறது.

Leave a comment

Happy New Year! 2012

New Year Greetings for 2012

Greetings! Happy New Year . 2012

Leave a comment

Happy New Year 2011

I wish all of you a happy and prosperous new year 2011

4 Comments

புதிய வகை கண் நோய் பரவும் அபாயம்

“மெட்ராஸ் ஐ” என அழைக்கப்படும் சென்னை கண்நோய் குறிப்பிட்ட சீசனில் வந்து மறைந்துபோகும். சமீப காலமாக மெட்ராஸ் ஐ குறைந்து போனாலும் தற்போது புதிய வகை கண் நோய் பரவுகிறது.

new kind of eye disease

புதிய வகை கண் நோய்

மெட்ராஸ் ஐயை விட அதிக நாட்களுக்கு நீடிக்கும் இந்த புதிய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கண்களின் வெளிப்படலத்திலும், இமைகளின் உள்புறத்திலும் ஏற்படும் வீக்கத்தினால் கண் வெளிப்படல சுழற்சி நோய் ஏற்படுகிறது.

பாக்டீரியா, புரோட்டோ சோவா போன்ற நுண்ணுயிரிகள் தாக்குதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை சென்னை கண் நோய் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை. சாதாரணமாக கண் நோய் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு 3, 4 நாட்களுக்கு கண்கள் இளஞ் சிவப்பாக இருக்கும். ஆனால் இந்த புதிய வகை கண் நோய் தொற்று குறைந்தது. 10 நாட்கள் வரையில் இருக்கிறது என்று சென்னை அண்ணாநகர் உமா கண் மருத்துவமனை கண் மருத்துவர் அருள்மொழி கூறினார். மேலும் அவர் கூறுகையில், சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் இந்த கண் நோய் நீடிக்கிறது. வைரஸ் தொற்று ஆரம்பித்து பின்னர் அதிக நாட்கள் நீடிக்கிறது. இந்த முறை வைரஸ் அதிக தீவிரத்துடன் செயல்படுகின்றன என்றார்.

சென்னை கண் நோய்க்கு பயன்படுத்தும் அதே மருந்தையே இதற்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கண் நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் நிறைய பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது காணப்படும் புதிய வகை கண்நோய் குறித்து ஆய்வு செய்து வருவதாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சீனியர் டாக்டர் வி.ஆர். சுதிர் தெரிவித்தார். தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் தேங்கி நிற்கும் நீரும் கண் நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் வளரக் காரணமாக உள்ளன என்று டாக்டர்கள் கூறினார்கள்.

நன்றி : மாலை மலர்
படம் : methodsofhealing.com

Leave a comment

மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம்

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

மஞ்சள் வாழைப்பழம் - yellow banana

மஞ்சள் வாழைப்பழம்

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்… என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின் டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன. பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒரு முறை மட்டும் காய்த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்த நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது:

டாக்டர். திருத்தணிகாசலம்

.

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும். இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது. இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்கமுடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.

நன்றி : மாலை மலர்
படம் : Photl.com

Leave a comment

காமன்வெல்த் தொடர்வண்டி

Commonwealth Express In Madurai

ஜுன் 24 -ம் தேதி புதுதில்லி சப்டர்ஜங் (Safdarjung) நிலையத்திலிருந்து கிளம்பிய காமன்வெல்த் தொடர்வண்டி இரு நாட்களுக்கு முன் மதுரையை வந்தடைந்தது.  [ படங்களை சொடுக்கி பெரிதாக்கவும் ]

madurai stoppage of commonwealth train

காமன்வெல்த் தொடர்வண்டி - மதுரை

தென் மாநில மக்களின் காட்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த இத்தொடர்வண்டி நேற்று இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு தொடர்ந்தது. கண்காட்சிக்கு மொத்தம் 11 பெட்டிகள் இருந்தது. 48 நகரங்களையும், 50 -க்கும்  மேற்பட்ட நிலையங்களையும் (நிறுத்தங்கள்) உள்ளடக்கி  அக்டோபர் 2 வாக்கில் மீண்டும் புதுதில்லியை சென்றடையும்.

first coach of commonwealth express

காமன்வெல்த் தொடர்வண்டியின் முதல் பெட்டி.

பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு, பிங்க் என ஒவ்வொரு பெட்டியும் ஒரு நிறத்தில் இருந்தது. அழகான வடிவமைப்பு, முந்தைய வருடங்களின் விளையாட்டுத் தொகுப்பு, காமன்வெல்த் விளையாட்டின் வரலாறு, வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் சாதனைப் பட்டியல், இந்தியாவின் காலநிலை மாற்றங்கள், மக்களின் வாழ்க்கை மாற்றங்கள் என சிறந்த தகவல்களுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்திற்காக மட்டும் 4- ர்க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் உள்ளது. புகைபடம் எடுக்க ஆரம்பித்தால் நாள் முழுக்க எடுத்துக் கொண்டே இருக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே இடுகின்றேன்.

meaning & story of india logo - chakra

இந்திய தேசிய சின்னத்தின் கதை மற்றும் பொருள்.

பெட்டிகள்

a coach of commonwealth express

பெட்டி 1

a coach of commonwealth express

பெட்டி 2

information technology coach of commonwealth express

பெட்டி 3 : தகவல் தொழில்நுட்பம்

a coach of commonwealth express

பெட்டி 4

மைதானங்கள்

ceremony will be held here

தொடக்க விழாவும், முடிவு விழாவும் நடக்க இருக்கும் ஜவஹர்லால் நேரு மைதானம்

indoor stadium

உள்விளையாட்டு அரங்கம் 1 மாதிரி வடிவம்

commonwealth games india indoor stadium 2

உள்விளையாட்டு அரங்கம் 2 மாதிரி வடிவம்

indoor stadium - commonwealth games 2010

உள்விளையாட்டு அரங்கம் 3 மாதிரி வடிவம்

indoor stadium commonwealth games 2010

உள்விளையாட்டு அரங்கம் 3 நுழைவு வாயில்

hockey stadium commonwealth games

ஹாக்கி விளையாட்டு மைதானம் மாதிரி வடிவம்

விளையாட்டுக் கருவிகள்

rugby

கைப்பந்து

tumbles

பளு தூக்கும் கருவி

riffle

துப்பாக்கி சுடுதல்

hockey_stick_ball

ஹாக்கி பந்து, மட்டை

disk & lance

வட்டு எறிதல்

archery

வில்வித்தை

இந்திய வாழ்க்கை முறை

transforming india

இந்திய வாழ்க்கை முறையின் மாற்றங்கள் 1

transforming india

இந்திய வாழ்க்கை முறையின் மாற்றங்கள் 2

transforming india

இந்திய வாழ்க்கை முறையின் மாற்றங்கள் 3

transforming india

இந்திய வாழ்க்கை முறையின் மாற்றங்கள் 4

மற்றவை

commonwealth poster

காமன்வெல்த் பிரச்சார படம்

cups shields prize

கோப்பைகள், பதக்கங்கள் & பரிசுகள்

players & records

இந்திய வீரர்களின் சாதனைகள்

first computer in world & india

இந்திய & உலகின் முதல் கணினி

ramnath, commonwealth & shera

நான், சிங்கம் (shera), காமன்வெல்த் தொடர்வண்டி

உங்கள் ஊர்களில் வலம் வரும் சமயம் தவறியும் தவற விட்டுவிடாதிர்கள்.

%d bloggers like this: